இந்தியா

வருங்கால வைப்புநிதி சந்தா சதவீதம் குறைப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி,மே.22-வருங்கால வைப்புநிதி சந்தா மூன்று மாதத்திற்கு 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என வருங்கால வைப்பு நிதி புதுச்சேரி மண்டல ஆணையர் வம்சி கிருஷ்ணா டிண்டி தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:மத்திய அரசு வருங்கால வைப்புநிதி சட்டத்தின் கீழ் வரும் அனைத்துப் பிரிவு நிறுவனங்களுக்கும் வருங்கால வைப்புநிதி சந்தாவை மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைத்து மத்திய அரசு கடந்த 13 ம் தேதி அறிவித்தது. மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அல்லது அவற்றுக்கு சொந்தமான நிறுவனங்கள், அடிப்படை ஊதியம், அகவிலைப் படியில் 12 சதவீதத்தைத் தொடர்ந்து வருங்கால வைப்புநிதி சந்தாவாக செலுத்தும். மேலும் பிரதமர் அறிவித்த, ஏழைகள் மறுவாழ்வு திட்ட பயனாளிகளுக்கு சந்தா குறைப்பு சதவீதம் பொருந்தாது. ஏனெனில், ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் அனைத்து ஊழியர்கள் மற்றும் வேலை கொடுக்கும் நிறுவன உரிமையாளர்களுக்கு 24 சதவீதத்தை மத்திய அரசே பங்களிக்கிறது. வருங்கால வைப்பு நிதி சந்தாவை, அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கும் நடவடிக்கையால், இந்திய அளவில் 4.3 கோடி ஊழியர்களின் நிகர சம்பளம் அதிகரிக்கும். 6.5 லட்சம் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் 2 சதவீதம் செலவினம் குறையும். இதன் மூலம் அவர்களுக்கு உடனடி பணப் புழக்கம் கிடைக்கும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X