இந்தியா

நேரடி நெல் கொள்முதல்: முதல்வர் துவக்கி வைத்தார்

Added : மே 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி;வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், இந்திய உணவுக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் பணியை மதகடிப்பட்டில் முதல்வர் நாராயணசாமி நேற்று துவக்கி வைத்தார்.புதுச்சேரி நெல் விவசாயிகளிடம் இருந்து சுமார் 20 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி அளவிற்கான நெல்லை, இந்திய உணவுக் கழகம் மூலம் நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.புதுச்சேரி மற்றும் காரைக்காலில், மே 20ம் தேதி முதல் 31ம் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார். அதன்படி தட்டாஞ்சாவடி, மதகடிப்பட்டு, கன்னியக்கோயில், கரையாம்புத்துார், காரைக்கால் தென்னங்குடி ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட துவங்கி உள்ளன.மதகடிப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் பணி நேற்று துவங்கியது.வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி, வேளாண் துறை செயலர் அன்பரசு முன்னிலை வகித்தனர் இயக்குனர் பாலகாந்தி வரவேற்றார். முதல்வர் நாராயணசாமி நெல் கொள்முதல் பணியை துவக்கி வைத்தார்.இந்திய உணவுக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் சன்ன ரகம் (கிரேடு ஏ) குவிண்டால் ரூ.1,835க்கும், மோட்டா ரகம் (பொது ரகம்) ரூ. 1,815க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார், ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலர் செழியன்பாபு, வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன், திருபுவனை வட்டார காங்., தலைவர் பாஸ்கரன் விவசாயிகள் சங்க நிர்வாகிகள கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X