வியட்நாமை கலக்கும் பிரமாண்ட 'பிரட்'

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
vietnam, bread, வியட்நாம், பிரட்

ஹனோய் : கொரோனா தாக்கம் வியட்நாமில் அதிகம் இல்லை என்பதால் அங்கு பொதுமக்கள் வாழ்க்கை இயல்பிலிருந்து மாறவில்லை. அன் ஷியாங் மாகாணத்தின் விசேஷமான மிக நீளமான பிரெட் விற்பனை மாமூலாக நடக்கிறது; சமூக இடைவெளி முக கவசம் என்ற எந்த தொந்தரவும் அங்கு கிடையாது.

திருநெல்வேலியில் அல்வா, மணப்பாறையில் முறுக்கு என நம்ம ஊரில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு உணவுப் பண்டம் பிரபலமாக இருக்கும்.தென் கிழக்காசிய நாடான வியாட்நாமிலும் இதுபோல் ஒவ்வொரு பகுதியிலும் ஏதாவது ஒரு உணவு பொருள் பிரபலமாக உள்ளது. இங்குள்ள அன் ஷியாங் என்ற மாகாணத்தில் பிரமாண்டமான பிரட் மிகவும் பிரபலம்.இந்த மாகாணத்தின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே கடை, சைக்கிள் மற்றும் சாலையோரங்களில் இந்த பிரட் வகைகள் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு பிரட்டும் 1 மீட்டர் நீளமும் 3 கிலோ எடையும் உள்ளன. இதை முழுவதுமாக வைக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் பை கிடைக்காததால் பிரட்டின் அடிப்பகுதியை மட்டும் 'கவர்' செய்யும் விதமாக பிளாஸ்டிக் பேக் தயார் செய்து அவற்றில் வைத்து விற்பனை செய்கின்றனர்.


latest tamil news


வெண்ணெய், நல்லெண்ணெய், மைதா ஆகிவற்றில் இந்த பிரட் தயாரிக்கப்படுகிறது. ஒரு பிரட்டின் விலை 160 ரூபாய். நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதாக சாப்பிட்டு விட முடியாது. கவனமாக சாப்பிடாவிட்டால் பல் உடைந்து விடும்; அவ்வளவு கடினமாக இருக்கும்.

'உலகின் மிக கடினமான உணவுப் பொருள்' என்ற பெருமையும் இதற்கு உண்டு. ஆனால் அன் ஷியாங் மாகாண மக்கள் மட்டும் அல்வா சாப்பிடுவது போல் லாவகமாக சாப்பிடுகின்றனர். வியாட்நாமின் அன் ஷியாங் மாகாணம் சுற்றுலா முக்கியத்துவம் இல்லாத பகுதி. அதனால் பிரட்டின் பெருமை நீண்ட காலமாக வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் தான் சமூக வலைதளங்கள் மூலமாக இந்த பிரட் பற்றிய விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. 'கொரோனா பிரச்னை சுமுகமாக முடிந்ததும் வியட்நாமுக்கு ஒரு நடை போய் இந்த பிரமாண்ட பிரட்டை நம்ம ஊருக்கு வாங்கி வரலாம்' என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். லக்கேஜுக்கே பல ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்!

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-மே-202023:47:46 IST Report Abuse
தமிழ்வேல் இது ஒரு மீட்டர் நீலம், 3 கிலோ வெல்லாம் கிடையாது... சுமார் 50 செ மீ நீலம் 250 கிராம் மாவில் செய்யப்படுவது. செய்தியில் கூறுவதுபோல நெய், எண்ணை யெல்லாம் சேர்ப்பதில்லை. விலை கட்டுப்படியாக அரிசிமாவு கொஞ்சம் கலப்பதுண்டு. கலவை புளிப்பதற்கு ஈஸ்ட் + உப்பு மட்டுமே சேர்க்கப்படும். காலையில் உண்ணுவதற்கு வெண்ணை + ஜாம் சேர்த்துக்கொள்வார்கள். தேநீரில் தொட்டு சாப்பிடுவதும் உண்டு. புதியதாக இருந்தால் மிருதுவாகவே இருக்கும். காய்ந்துவிட்டால் (அதாவது மறுநாள்) மட்டுமே கல்போல மாறிவிடும். ஆனால் இரு முனைகளும் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். பிரென்ச் காரர்களின் ஆதிக்கத்தில் புகுத்தப்பட்டது.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-மே-202009:22:38 IST Report Abuse
skv srinivasankrishnaveni சிங்கப்பூர்லேயும் இதுபோலவே நீளமான பிரட் பிரசித்தம் பாத்துருக்கேன் நேக்கு அதுலே முட்டை இருக்குமான்னு சந்தேகம் அதனால் வாங்கவேமாட்டோம் , சாதாரண பிரட் தான் அதுலே பிரவுன் பிரட் வீட் பிரட் என்று பலவிதம் கிடைக்கும்
Rate this:
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
22-மே-202006:44:11 IST Report Abuse
Mahesh இதில் விரும்புவதற்கு எதுவுமே இல்லை. மைதாவில் செய்யப்பட்டது. டூ வீலரில் கொண்டு செல்லப்படும்போது தெருவில் உள்ள குப்பை அனைத்தும் அதில் படியும். தின்பதற்கு கடினமானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X