இந்தியா

வயல்வெளி சாலை போலீசார் துண்டிப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார்-வீராணம் வயல்வெளி சாலையில் பள்ளம் தோண்டி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. மாநில எல்லைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தொற்று அதிகம் பரவி வரும் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து மக்கள் நெட்டப்பாக்கம் பகுதியில் நுழையாத வகையில், சாலையில் தடுப்பு ஏற்படுத்தினர். ஆனால் தமிழக பகுதி மக்கள் வயல்வெளி வழியாக நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லுார் வந்து செல்கின்றனர்.இதனையறிந்த போலீசார், பண்டசோழநல்லுார்- வீராணம் வயல்வெளி சாலையில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, வழியை தடுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X