இந்தியா

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

Added : மே 22, 2020
Share
Advertisement

வில்லியனுார்; சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட லோடு கேரியர் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.வில்லியனுார் சங்கராபரணி ஆற்றில் மாட்டு வண்டி, மினி வேன் போன்ற வாகனங்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். சப் கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி., உத்தரவின் பேரில், மணல் கொள்ளையை தடுக்க வில்லியனூர் போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு ஒதியம்பட்டு சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசாரை பார்த்ததும், லோடு கேரியர் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடினர்.அந்த வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், மணல் கடத்தியது உத்திரவாகிணிபேட்டை சேர்ந்த ஜனார்த்தனன் என தெரிந்தது. அவரை தேடி வருகின்றனர்.பாகூர்பாகூர் அடுத்த குருவிநத்தம் தென்பெண்ணையாறு சித்தேரி அணைக்கட்டு பகுதியில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் ஆற்று மணலை கொள்ளையடிக்கும் நோக்கில், சாக்கு மூட்டைகளில் நிரப்பி மறைத்து வைத்திருந்தனர்.தகவலறிந்த பாகூர் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஆற்றில் சுமார் 30 மூட்டைகளில் மணல் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். மணல் மூட்டைகளை பிரித்து அங்கேயே கொட்டினர். மணல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X