இந்தியா

புதுச்சேரிக்கு திரும்புபவர்களால் அதிகரிக்கும் 'கொரோனா'தகவல் பரிமாற்றம் அவசியம் என அதிகாரிகளுக்கு உத்தரவு

Added : மே 22, 2020
Share
Advertisement
 புதுச்சேரிக்கு திரும்புபவர்களால் அதிகரிக்கும் 'கொரோனா'தகவல் பரிமாற்றம் அவசியம் என அதிகாரிகளுக்கு உத்தரவு

புதுச்சேரியில், டில்லியில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின், கோயம்பேடு தொடர்புடையவர்களால் பாதிப்பு அதிகரித்தது. எனினும், சுகாதாரத் துறையினரின் சிறப்பான நடவடிக்கைகளால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து, வீடு திரும்பி வருகின்றனர்.

இதுவரை, 10 பேர் மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்க துவங்கி உள்ளது. கடந்த 17ம் தேதியில் இருந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், வெளி நாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் சிக்கி தவித்த புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் திரும்பி வருகின்றனர்.அதிகரிக்குது கொரோனாஇவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதால், புதுச்சேரியில் கொரோனா பட்டியல் வேகமாக உயர்ந்து வருகிறது.மாகி பகுதியில், வளைகுடா நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்களுக்கே கொரோனா தொற்று அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. காரைக்காலில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் துபாயில் இருந்து திரும்பியவர்.இதுபோலவே, புதுச்சேரியிலும் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் குவைத்தில் இருந்து திரும்பிய குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில், தாய்க்கும், மகளுக்கும் தொற்று இருந்தது தெரிய வந்தது.துபாயில் இருந்து நேற்று முன்தினம் புதுச்சேரி திரும்பிய 3 பேருக்கு கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனையில் உறுதியானது. துபாயில் இருந்து திரும்பியவர்களுக்கு ஏர்போர்ட்டில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. ஆனால், புதுச்சேரியில் நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது.

இதனால், புதுச்சேரி சுகாதாரத் துறையினர் உஷாராகி உள்ளனர்.துறைகளுக்குள் இடைவெளிவெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் சிக்கி உள்ள புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக, பிரத்யேகமான இணையதளத்தை அரசு உருவாக்கி உள்ளது.

இதில், புதுச்சேரி திரும்புவதற்காக ஏராளமானோர் பதிவு செய்து வருகின்றனர்.எனவே, எதிர்காலத்தில் நுாற்றுக்கணக்கானோர் புதுச்சேரிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை பரிசோதனை செய்யவும், தொற்று இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கவும், தனிமைப்படுத்துவதற்கும் உரிய ஏற்பாடுகளை, சுகாதாரத் துறையினர் செய்து வருகின்றனர். இதற்காக 526 படுக்கைகளுடன், 6 மையங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில், மற்ற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரும்பும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் குறித்த தகவல்கள் சுகாதாரத் துறையினருக்கு சரியாக தெரிவிக்கப்படுவதில்லை; மற்ற துறையினரிடம் தகவல் பரிமாற்றத்தில் குறைபாடு உள்ளது, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவின் கவனத்துக்கு வந்தது.கிடுக்கிப்பிடிஇந்த பிரச்னையால், கொரோனா எளிதாக பரவும் அபாயம் உள்ளதை அறிந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டா, இயக்குனர் மோகன்குமார், இந்தியமுறை மருத்துவ இயக்குனரகத்தின் இயக்குனர் ஸ்ரீராமுலு, நோடல் அதிகாரி ரமேஷ், கலெக்டர் அருண், புலம்பெயர்ந்தோர் போக்குவரத்திற்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பூர்வாகார்க், சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால், சட்டசபை செயலரும், புலம்பெயர்ந்தோருக்கான போக்குவரத்து அதிகாரியுமான முனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குறித்த தகவல்களை சுகாதாரத் துறையினருடன் முறையாக பரிமாறிக் கொள்ள வேண்டும் என, மற்ற துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார்.இதன்மூலம், கொரோனா பரிசோதனை, சிகிச்சை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்ள முடியும் என்பதை சுட்டிக் காட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X