சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'சேலம் கொரோனா வார்டுக்கு ஒரு சிக்கன் பிரியாணி பார்சேல்ல்ல்...!'

Added : மே 22, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளிகள், பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுக்கு, ஆன்லைனில், 'ஆர்டர்' செய்ததால், டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து, சேலம் வந்தவர்களில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட, 22 பேர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய உணவு, அங்கேயே வழங்கப்படுகிறது.ஆனால், நான்கு பேர், அசைவ உணவு வேண்டும் என மருத்துவர்களிடம் கேட்டனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. இதையடுத்து, 'ஆன் லைன்' மூலம், தந்துாரி சிக்கன், சிக்கன் பிரை, சிக்கன் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளை, அவர்கள், 'ஆர்டர்' செய்துள்ளனர். தனியார் நிறுவன ஊழியர், இந்த உணவுகளோடு, அரசு மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டு முன் காத்திருந்தார்.

சந்தேகப்பட்டு, மருத்துவர்கள் விசாரிக்கும் போது, கொரோனா நோயாளிகள் ஆர்டர் கொடுத்தது தெரிந்தது. அவரை எச்சரித்து, திருப்பி அனுப்பியதோடு, தொற்று நோயாளிகளுக்கும் அறிவுரை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X