கொரோனா தடுப்பு பணி ஆர்.ஐ., திருச்சி அருகே விபத்தில் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணி ஆர்.ஐ., திருச்சி அருகே விபத்தில் பலி

Added : மே 22, 2020
Share

திருச்சி : கொரோனா தடுப்பு பணிக்கு சென்று திரும்பிய, வருவாய் ஆய்வாளர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.

திருச்சி, முசிறி அருகே உள்ள தொட்டியம், ஆர்.ஐ.,யாக பணியாற்றியவர் சேகர், 51. இவர் கொரோனா தடுப்பு பணியில், சிறப்பு அலுவலராக பணியாற்றினார்.நேற்று முன்தினம் மாலை, தொட்டியம் அருகே, கள்ளிக்குடி கிராமத்தில், நிவாரண உதவிகள் மக்களுக்கு சரியாக சென்றுள்ளதா என, ஆய்வு செய்தார். பின், தன் ஸ்கூட்டியில் தொட்டியம் திரும்பிக் கொண்டிருந்தார். வரதராஜபுரம்என்ற இடத்தில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சேகர் படுகாயம் அடைந்தார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று அதிகாலை இறந்தார். சேகருக்கு மனைவியும், 10ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். சேகர் உடலுக்கு, திருச்சி கலெக்டர் சிவராஜ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். கொலையா?தொட்டியம் பகுதியில், மணல் கடத்தல் அதிகம் நடப்பது வழக்கம். மணல் கடத்தல்காரர்களுக்கு, ஆர்.ஐ., சேகர் சிம்மசொப்பனமாக விளங்கி உள்ளார்.இதனால், மணல் கடத்தல் கும்பல் திட்டமிட்டு, இந்த விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம், வருவாய்த் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X