சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாட்ஜில் அழுகிய நிலையில் 'மாஜி' அதிகாரி உடல் மீட்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

தஞ்சாவூர் : ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, தஞ்சையில் உள்ள லாட்ஜில், அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

திருச்சி, கருமண்டபத்தைச் சேர்ந்தவர், ராதா மணாளன், 65. கூட்டுறவு துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், 20 ஆண்டுகளாக, மனைவியை பிரிந்து வாழ்ந்தார்.உடல் நலம் பாதித்ததால், ஆறு மாதங்களாக, தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். தஞ்சை மருத்துவக் கல்லுாரி எதிரே உள்ள தனியார் லாட்ஜில் தங்கியிருந்தார். கடந்த நான்கு நாட்களாக, அவரது அறை பூட்டப்பட்டு கிடந்தது. நேற்று, அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால், சந்தேகம் அடைந்த ஊழியர்கள், மருத்துவக் கல்லுாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வந்து, உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து பார்த்தனர். ராதா மணாளன், உடல் அழுகிய நிலையில், படுக்கையில் பிணமாக கிடந்தார். உடல்நலம் குன்றி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X