சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி மத்திய சிறை குடியிருப்பில் மது அருந்திய போலீசார் அராஜகம்

Added : மே 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 திருச்சி மத்திய சிறை குடியிருப்பில்  மது அருந்திய போலீசார் அராஜகம்

திருச்சி : திருச்சி மத்திய சிறையில் இருந்து, பணி மாறுதல் பெற்றவர்கள், சிறை குடியிருப்பில் மது அருந்தி, குடியிருப்புவாசிகளை பயமுறுத்தும் வகையில் நடந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்சி மத்திய சிறை மற்றும் பெரம்பலுார் உள்ளிட்ட, பல மாவட்டங்களில் பணியாற்றும் இரண்டாம் நிலை சிறைத் துறை போலீசார், 43 பேர், வேறு மாவட்டங்களுக்கு, விருப்ப மாறுதல் பெற்றனர்.இவர்களில், 20க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி முதல், நள்ளிரவு, 12;00 மணி வரை, மத்திய சிறை போலீசாருக்கான குடியிருப்பின், 'பி பிளாக்' மொட்டை மாடியில் அமர்ந்து, மது அருந்தி, கும்மாளம் அடித்தனர்.

பின், ஒரு பைக்கில் மூவர், நான்கு பேர் என ஏறி, குடியிருப்பில் ஆபத்தான முறையில் பைக்கை ஓட்டி வலம் வந்துள்ளனர். சைடு ஸ்டாண்டை சாலையில் உரசி, தீப்பொறி கிளம்பும் வகையில் ஓட்டியதுடன், ஆரவாரமாக கூச்சலிட்டபடி, பெண்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தினர். குடியிருப்பில் மற்ற சிறைத்துறை போலீசார் வசித்தாலும், மது போதையில் இருந்தவர்களை தட்டிக் கேட்க யாரும் முன்வரவில்லை. 'இப்பிரச்னையில் உயர் அதிகாரிகள் தலையிட்டு, தரக்குறைவாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மே-202019:12:22 IST Report Abuse
ஆப்பு All animals are equal, some animals are more equal.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X