கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'பீஹார் துப்பாக்கி கலாசாரத்தை இங்கு அனுமதிக்க முடியாது'

Added : மே 22, 2020
Share
Advertisement

மதுரை : 'பீஹார், உ.பி.,யில் உள்ள துப்பாக்கி கலாசாரத்தை இங்கு அனுமதிக்க முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை, அதிருப்தி தெரிவித்தது.

திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தைச் சேர்ந்தவர், சசி, 25. இவரும், நண்பர்கள், ஐந்து பேரும், வழக்கு விசாரணைக்காக, திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் நீதிமன்றத்திற்கு, 2019 ஆக., 29ல் சென்று, காரில் திரும்பினர்.மதுரை, கப்பலுார் டோல்கேட்டில் ஊழியர்கள் கட்டணம் கேட்டதால், இரு தரப்பிற்கும் பிரச்னை ஏற்பட்டது. சசி, துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார். சசி உட்பட சிலரை, திருமங்கலம் நகர் போலீசார் கைது செய்தனர். அவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, 2019 அக்., 15ல், மதுரை கலெக்டர் உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சசியின் சகோதரி தனலட்சுமி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள், பி.என். பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.மனுதாரர் தரப்பில், 'சசி, ஒன்பது மாதங்களாக சிறையில் உள்ளார். கைது செய்யப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறி விட்டது. 'கைது உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது; அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள், 'பீஹார், உ.பி.,யில் உள்ளது போன்ற, துப்பாக்கி கலாசாரத்தை இங்கு அனுமதிக்க முடியாது' என, அதிருப்தி தெரிவித்து, விசாரணையை, நான்கு வாரங்கள் ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X