அரசியல் செய்தி

தமிழ்நாடு

'10ம் வகுப்பு தேர்வர்கள் வசதிக்காக 22 வழிமுறைகள்'

Added : மே 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோபி : ''பத்தாம் வகுப்பு தேர்வர்கள் வசதிக்காக, 22 வழிமுறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார். ஈரோடில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுதும், ஜூன், 15ல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும். தேர்வர்கள் வசதிக்காக, 'இ - பாஸ்' முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. எந்த சிரமமும் இன்றி தேர்வர்கள், இ - பாஸ் பெறும்
 '10ம் வகுப்பு தேர்வர்கள் வசதிக்காக 22 வழிமுறைகள்'

கோபி : ''பத்தாம் வகுப்பு தேர்வர்கள் வசதிக்காக, 22 வழிமுறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுதும், ஜூன், 15ல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும். தேர்வர்கள் வசதிக்காக, 'இ - பாஸ்' முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. எந்த சிரமமும் இன்றி தேர்வர்கள், இ - பாஸ் பெறும் வழிமுறைகள் குறித்து, சுற்றறிக்கை தயார் செய்து உள்ளோம். அதில், தேர்வரின் வசதிக்காக, பஸ் போக்குவரத்து, இ - பாஸ் முறை, அடையாள அட்டை என, மொத்தம், 22 வழிமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுத்தேர்வு முடிந்த பின், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். தேர்வர்களுக்கு தொற்று ஏற்படாத வகையில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மாணவர்களின் ஆரோக்கியத்துக்காக, தேர்வு மையங்கள் கூடுதலாக்கப்பட்டுள்ளன. முதலில், 3,684 மையங்கள் இருந்தன. இப்போது, மூன்று மடங்கு உயர்த்தி, 12 ஆயிரத்து, 674 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
22-மே-202016:15:49 IST Report Abuse
Girija நீங்க அறிவுக்கொழுந்து உதயநிதி ஸ்டாலின் சொன்ன அறிவுரைகளை கேட்டு தெளிவா நடந்துகொள்வதாக செய்திகள் வருகிறது , வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X