8 மாத கர்ப்பிணி மரணம் ; மருத்துவமனை மீது புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

8 மாத கர்ப்பிணி மரணம் ; மருத்துவமனை மீது புகார்

Added : மே 22, 2020
Share
 8 மாத கர்ப்பிணி மரணம்  ; மருத்துவமனை மீது புகார்

பெரம்பலுார் : பெரம்பலுார் அரசு மருத்துவமனையில், 8 மாத கர்ப்பிணி, மூச்சுத் திணறலால் உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரி, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மனைவி தேவி, 29. திருமணமாகி, 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத தால், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில், செயற்கை கருத்தரித்தல் முறையில் கருவுற்றார். தற்போது, 8 மாத கர்ப்பிணியான தேவிக்கு, காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு இருந்தது. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, காய்ச்சல் அதிகமானதால், வீரகனுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின், செயற் கை கருத்தரித்தல் செய்து கொண்ட, திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கிளம்பினர்.

பெரம்பலுார் அருகே வந்தபோது, மூச்சுத் திணறல் அதிகமாகவே, இரவு, 12:00 மணிக்கு, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதிகாலை, 1:10 மணிக்கு, தேவி உயிரிழந்தார்.காய்ச்சல், சளி தொந்தரவுடன், மூச்சு திணறலும் இருந்ததால், அவரது ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தேவியின் உறவினர்கள் கூறியதாவது: தேவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட போது, திருச்சி, செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனை டாக்டர்களை தொடர்பு கொண்டோம். 'அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்' என, அலட்சியமாக கூறி விட்டனர்.

கொரோனாவை காரணம் காட்டி, அங்கு சிகிச்சைக்கு வர வேண்டாம் என தெரிவித்ததால், தேவியின் இறப்புக்கு, அந்த மருத்துவமனையின் அலட்சிய போக்கே காரணம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X