தமிழ்நாடு

'காமுகன்' காசிக்கு 6 நாள் காவல்

Added : மே 22, 2020
Share
Advertisement
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில், காசியை ஆறு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, கோர்ட் அனுமதியளித்தது. பெண்களிடம் பழகி, மிரட்டி பணம் பறித்த வழக்கில், குமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி, 26, கைதானார். இவர் மீது, பெண்கள் பலாத்காரம், கந்து வட்டி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.கன்னியாகுமரியைச் சேர்ந்த, 17 வயது மாணவியை பலாத்காரம்

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில், காசியை ஆறு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, கோர்ட் அனுமதியளித்தது.

பெண்களிடம் பழகி, மிரட்டி பணம் பறித்த வழக்கில், குமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி, 26, கைதானார். இவர் மீது, பெண்கள் பலாத்காரம், கந்து வட்டி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.கன்னியாகுமரியைச் சேர்ந்த, 17 வயது மாணவியை பலாத்காரம் செய்து, 'போக்சோ' சட்டத்தில் கைதான அவரை விசாரிக்க அனுமதி கேட்டு, கோட்டார் போலீசார், கோர்ட்டில் மனு செய்தனர். ஆறு நாள் காவல் அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து, காசியிடம், கன்னியாகுமரி மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில், விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X