சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.5 கோடி போதை பொருட்கள் பறிமுதல்

Added : மே 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ரூ.5 கோடி போதை பொருட்கள் பறிமுதல்

திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ரூ.5 கோடி மதிப்புள்ள போதைபொருட்கள், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தலில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.தொண்டி அருகே வீரசங்கலிமடத்தில் வீட்டில் பதுக்கிய 1,000 கிலோ செம்மரக்கட்டைகளை சில நாட்களுக்கு முன்பு திருவாடானை டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ் தலைமையில் போலீசார் கைப்பற்றினர். இருவரிடம் விசாரித்தனர். விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. வருண்குமார் எஸ்.பி., தனிப்படை அமைத்தார். அவசர குற்றப்பிரிவு எஸ்.ஐ., நவநீத கிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிவகங்கை மாவட்ட எல்லையில் சோதனை செய்தனர்.அப்போது, 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தை சேர்ந்த அப்துல்ரஹீம் 49, அஜ்மல் கான் 48, தொண்டி அபுல்கலாம் ஆசாத் 23, சூராணம் அருள்தாஸ் 43, தேவகோட்டை சுரேஷ்குமார் 44, புதுக்கோட்டை மாவட்டம் ஆவடையார்கோயில் கேசவன் 42, கருமொழி முத்துராஜா 38, சோலியக்குடி அப்துல்வகாப் 42, வீரசங்கலிமடம் அஜ்மீர் கான் 42, என்பது தெரியவந்தது.556 கிராம் ெஹராயின், 14 கிராம் ஓபியம், 4 கிலோ மெத்தாகுலைன், 6.8 கிராம் அம்ஜெட்டாமின், 24 கிராம் மெத்தாபொட்டமைன், எம்.டி.எம்.ஏ., 3 மாத்திரைகள், 4 தங்க பிஸ்கட்டுகள், 24 அலைபேசிகள், இரண்டரைலட்சம் ரூபாய், கார், பறிமுதல் செய்யப்பட்டன.

எஸ்.பி., வருண்குமார் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட செம்மரம் மற்றும் போதை பொருட்களின் மதிப்பு ரூ.5 கோடி. இக் கும்பல் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடையவர்கள். போதை பொருட்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டு வீரசங்கலிமடத்தில் இருந்து படகில் இலங்கைக்கு கடத்த இருந்தனர். உடந்தையாக உள்ள மேலும் பலரை விரைவில் கைது செய்வோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - chennai,இந்தியா
22-மே-202007:02:53 IST Report Abuse
ravi சூப்பர்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X