பெங்களூரு: நாட்டில் ஊரடங்கு காலகட்டங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து உள்ளது அதில் கேரள மாநிலம் முன்னிலை வகிக்கிறது என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்து உள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ஐ.டி., நிறுவனம் ஒன்றுநடத்திய ஆய்வில் கூறி இருப்பதாவது: கடந்த பிப்., மாதம் முதல் ஏப்., வரையிலான கால கட்டங்களில் சைபர் கிரைம்களின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டது இத்தகைய மோசடிகள் தனிநபர் கார்ப்பரேட் நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்பட்டு உள்ளன.
பயனாளிகளின் ரகசிய குறியீடு, வங்கி விவரங்கள் போன்றவற்றை பெற கம்ப்யூட்டர்கள் மற்றும் மொபைல் போன்கள் மூலம் தாக்குதலை நடத்துவதை நோக்கமாக கொண்டிருந்தன. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகர மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அதே நேரத்தில் பெருநகரங்கள் வழிப்புடன் இருந்து தாக்குதலில் தப்பி உள்ளன.

காசியாபாத், லக்னோ நகர மக்கள்நான்கு முதல் ஆறு மடங்கு தாக்குதலை எதிர்கொண்டு உள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் கோட்டயம், கண்ணூர், கொல்லம் மற்றும் கொச்சி நகரங்களில் முறையே 462,374,236,147 தாக்குதல்களை நடத்தி உள்ளது. தொடர்ந்து பஞ்சாப் 207,தமிழ்நாடு 184 தாக்குதல்களையும் எதிர்கொண்டுள்ளன.
இத்தகைய தாக்குதல்கள் அனைத்தும் பயனாளர்களின் பயத்தை அதிகரிப்பது மற்றும் அவசர உணர்வை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. மோசடி செய்பவர்கள் கொரோனா தடுப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட மையங்களின் பிரதிநிதிகளாகவும் தங்களை அடையாளம் காட்டி கொண்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE