வெடிகுண்டுகள் வீச்சு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெடிகுண்டுகள் வீச்சு

Added : மே 22, 2020
Share

மதுரை : பாலமேடு அருகே, இரு தரப்பு முன் விரோதத்தில், நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில், நாய் தலை சிதறி பலியானது.

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே, ராமகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி செல்வராணியின் சகோதரர் முருகன், 31.கூலி தொழிலாளியான முருகன், அடிக்கடி மது போதையில், பக்கத்து வீட்டு போர்வெல் தொழிலாளி சின்னத்துரை, 55, என்பவரிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறில் ஈடுபட, ஆத்திரமுற்ற சின்னத்துரை, பன்றிகளை வேட்டையாட வைத்திருந்த, வீட்டில் தயாரித்த, நான்கு நாட்டு வெடிகுண்டுகளை செல்வராணி வீட்டின் மீது வீசினார்.

இதில், ஒரு வெடிகுண்டு வெடித்தது. வெடிக்காத ஒரு குண்டை, செல்வராணியின் வளர்ப்பு நாய் கவ்விச் சென்ற போது, திடீரென வெடித்ததில் தலை சிதறி இறந்தது.தகராறில் ஈடுபட்ட முருகனை, போலீசார் கைது செய்தனர். சின்னத்துரையை தேடி வருகின்றனர். இவர் மீது, கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X