சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியை மிரட்டி பலாத்காரம் அகதிகள் முகாம் வாலிபர் கைது

Added : மே 22, 2020
Share
Advertisement

திருச்சி : மாணவியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த, இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, வாழவந்தான் கோட்டையில் உள்ள, இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் கிஷாந்த், 19. இவர், ஓராண்டுக்கு முன், திருச்சி கே.கே.நகரில் உள்ள, டியூஷன் சென்டரில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு படித்து வந்தார்.அப்போது, அங்கு பயின்ற, பிளஸ் 1 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. மாணவியுடன் சேர்ந்து போட்டோ எடுத்த கிஷாந்த், அவரை காதலிப்பதாக கூறி, அவரது போட்டோக்களை, 'வாட்ஸ் ஆப்'பில் வாங்கி வைத்துள்ளார்.

'அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்' என மிரட்டி, மாணவியை, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.மாணவி, தன் பெற்றோர் மூலம், திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், கிஷாந்தை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X