சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Added : மே 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

திருப்பத்துார் : வாணியம்பாடி அருகே, மலை மீது, 9 கி.மீ., நடந்து சென்று, கிராம மக்களுக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி வழங்கினார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்னா மலைக்கு சாலை, மின்சாரம், மருத்துவ வசதிகள் இல்லை. மருத்துவம் மற்றும் பிரசவங்களுக்கு டோலி கட்டி, வாணியம்பாடிக்கு வர வேண்டிய நிலைமை உள்ளது.ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இதனால், தானே நேரில் சென்று நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் வீரமணி அறிவித்தார்.

இதன்படி, நேற்று காலை, 10:00 மணிக்கு, திருப்பத்துார் கலெக்டர் சிவன் அருள், எஸ்.பி., விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் வீரமணி, வளையாம்பட்டு மலையடி வாரத்துக்கு காரில் சென்றார்.கொளுத்தும் வெயிலில், அங்கிருந்து, 9 கி.மீ., அனைவரும் நடந்து சென்றனர். மதியம், 2:00 மணிக்கு, நெக்னா மலைக்கு சென்றனர். அங்கு வசிக்கும், 2,000 பேருக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை, அமைச்சர் வீரமணி வழங்கினார். பின், மாலை, 5:00 மணிக்கு திரும்பினார்

.நெக்னா மலை, வாணியம்பாடி சட்டசபை தொகுதியில் வருகிறது. இத்தொகுதியை சேர்ந்த, எம்.எல்.ஏ., நிலோபர் கபில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.'அவரது தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது, அவர் வரவில்லை' என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-மே-202003:58:12 IST Report Abuse
J.V. Iyer சாலை, மின்சாரம், மருத்துவ வசதிகள் இல்லை. இதை அல்லவா தமிழக அரசு முதலில் செய்திருக்கவேண்டும். ஐம்பது ஆண்டுகளாக வசதிகளை செய்யாமல் இப்படிப்பட்ட இடங்களை வைத்துக்கொண்டிருப்பதற்கு இந்த ஊர் MLA க்கள் வெட்கப்படவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X