பொது செய்தி

தமிழ்நாடு

காராமணி, சோளப்பயிர் விதை வழங்கல்

Added : மே 22, 2020
Share
Advertisement

திருத்தணி : விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு, தேவையான தீவனம் பயிரிட, கால்நடை துறை சார்பில், விதைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

திருத்தணி வருவாய் கோட்டத்தில், 24 கால்நடை மருந்தகங்கள், மூன்று கிளை நிலையங்கள் உள்ளன. விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தீவனப் பயிர், கால்நடை துறையால் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், தற்போது, காராமணி, சோளம் போன்ற தீவனப் பயிர்களுக்கு, விதைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இது குறித்து, திருத்தணி கால்நடை உதவி இயக்குனர், எஸ்.தாமோதரன் கூறியதாவது:நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ், கொசஸ்தலை ஆறு மற்றும் நந்தியாறு உபவடி நிலப்பகுதியில் வசிக்கும் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு, தீவனப் பயிர் செய்ய இலவசமாக விதைகள் வழங்கப்படுகின்றன.தற்போது, காராமணி, சோளம் போன்ற தீவனப் பயிர்கள் பயிர் செய்வதற்கு, மொத்தம், 150 விவசாயிகளுக்கு, இலவசமாக விதைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, பயனாளிகள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாளில், பயனாளிகளுக்கு விதைகள் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X