பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணியில் விடைத்தாள் திருத்தும் மையம் கோரி மனு

Added : மே 22, 2020
Share
Advertisement

திருத்தணி : திருத்தணியில், அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம் மையம் ஏற்படுத்தி தர வேண்டும் என, அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில், எம்.எல்.ஏ.,விடம் மனு கொடுக்கப்பட்டது.

திருத்தணி கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில், நேற்று, திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மனை சந்தித்து மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி, அம்பத்துார், திருவள்ளூர் கல்வி மாவட்டங்களில் மட்டும், அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம் மையம் செயல்படுகின்றன. ஆனால், திருத்தணி கல்வி மாவட்டத்திற்கு, விடைத்தாள் திருத்தம் மையம் ஏற்படுத்தாததால், இந்த கல்வி மாவட்ட ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்துவதற்கு, திருவள்ளூர், ஆவடி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இதனால், இருபால் ஆசிரியர்களும், விடைத்தாள் திருத்தம் பணிக்கு செல்வதற்கு கடும் சிரமப்படுகின்றனர். எனவே, நடப்பாண்டு முதல், திருத்தணியில் விடைத்தாள் திருத்தம்மையம் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ., உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X