கும்மிடிப்பூண்டி : தமிழகத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வட மாநில தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலத்திற்கு படையெடுத்து செல்வது தற்போது அதிகரித்து வருகிறது.
அரசு ஏற்பாடு செய்யும் சிறப்பு ரயில்களில் இடம் கிடைக்காதவர், சிறப்பு ரயில் பற்றிய தகவல் தெரியாதவர் என, தினசரி ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள், நடைபயணமாக தங்கள் மாநிலத்திற்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.இதனால், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓடிசா, பீஹார், மேற்கு வங்கம், உத்திரபிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், அதிக அளவில் நடை பயணமாக செல்வதைக் காண முடிகிறது.
மேற்கண்ட மாநிலங்களுக்கான ரயில் பாதை, கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்வதாலும், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை ஒட்டி இருப்பதாலும், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் இருந்து, மேற்கண்ட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என, வட மாநில தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நடைபயணாக செல்லும் வட மாநில தொழிலாளர்களை, கும்மிடிப்பூண்டியில் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.அவர்களின், விபரங்களை கேட்டறிந்து, அப்படியே ரயிலில் ஏற்றி அனுப்பினால், வசதியாக இருக்கும் என, வட மாநில தொழிலாளர்கள் கருதுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE