பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்புகளை சேதப்படுத்தி வாகனங்கள் இயக்கம்

Added : மே 22, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் நகரின் பல தெருக்களுக்கு, நகராட்சி ஊழியர்கள் தடுப்பு ஏற்படுத்தி, வாகனங்கள் இயக்கத்தை தடை செய்தனர்.

இதையடுத்து, மூங்கில் மண்டபம், ரயில்வே சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளின் நடுவே போடப்பட்ட தடுப்புகளை, சில நாட்களுக்கு முன், நகராட்சி நிர்வாகம் அகற்றியது. எனினும், முக்கிய வீதிகளில் தடுப்பு அகற்றப்படவில்லை.இந்நிலையில், வாகன ஓட்டிகள் சிலர், சுதந்திரமாக ஊர் சுற்றுவதற்கும், மதுக்கடைகளுக்கு செல்வதற்கும், நகராட்சி அமைத்த தடுப்புகளை சேதப்படுத்தி, அதன் வழியாக, வாகனங்களில் சென்று வருகின்றனர்.இதனால், பிரதான தெருக்களில் விபத்து மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என, பொதுமக்களிடயே பீதி உருவாகி உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X