கொரோனா பணி அதிகாரி ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பணி அதிகாரி ஆய்வு

Added : மே 22, 2020
Share

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், கொரோனா தொற்றால், எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பேரூராட்சியில் வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு அமைத்து, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு செல்லும் வகையில், பேரூராட்சி அதிகாரிகள், நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், பேரூராட்சி முழுதும் துாய்மை பணி மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.இந்த பணிகளை, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோகரன், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X