சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முக கவசம் கட்டாயம் மீறினால் அபராதம்

Added : மே 22, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம்: கொரோனா ஊரடங்கு சமயத்திலும், திறக்கப்பட்டுள்ள கடைகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறையை, அரசு வழங்கியுள்ளது.

அதன்படி, கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு, கிருமி நாசினி தர வேண்டும். அவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனரா என, கடைக்காரர்கள் கண்காணிக்க வேண்டும்.அதேபோல், பொதுமக்கள் வெளியில் செல்லும் போது, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என, காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில், ஆட்டோ மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது.

நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறியதாவது:காஞ்சிபுரம் நகராட்சியில், அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, ஐந்து குழுக்களை, மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. அரசு அறிவித்த வழிமுறைகளை கடைப்பிடிக்காத கடையை, 'சீல்' வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது, முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். அணியாதவருக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதுவரை முக கவசம் அணியாதோரிடம் இருந்து, 4,000 ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X