பொது செய்தி

தமிழ்நாடு

சமூக விலகலை கடைப்பிடிக்காமல் ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி

Added : மே 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 சமூக விலகலை கடைப்பிடிக்காமல் ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி

ஸ்ரீபெரும்புதுார் : முன்னாள் பிரதமர் ராஜிவ், கடந்த, 1991ல், ஸ்ரீபெரும்புதுாரில், தேர்தல் பிரசாரம் செய்தபோது, மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இதையடுத்து அவருக்கு, உயிரிழந்த இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ராஜிவ், 29ம் ஆண்டு நினைவு தினமான நேற்று, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் நிர்வாகிகள் என, 100க்கும் மேற்பட்டோர், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவிடத்தில், அஞ்சலி செலுத்த வந்தனர்.ஊரடங்கு காரணமாக, அவர்களை கூட்டமாக உள்ளே செல்ல, போலீசார் அனுமதிக்க மறுத்தனர். இதனால், காங்., நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும், சிறிது நேரம் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின், கூட்டம் சேராமல், சமூக இடைவெளியை பின்பற்றி அஞ்சலி செலுத்த, போலீசார் அனுமதித்தனர். ஆனால், அதை பின்பற்றாமல், நினைவிடத்தின் உள்ளே, கூட்டமாக சென்று, மலர் வளையம் வைத்து, கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மே-202008:04:09 IST Report Abuse
Purus Rajan Cetty விடுங்க சார் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்!
Rate this:
Cancel
Devaraju -  ( Posted via: Dinamalar Android App )
22-மே-202010:30:35 IST Report Abuse
Devaraju Animals like this
Rate this:
Cancel
22-மே-202007:06:54 IST Report Abuse
ஆப்பு போக விரும்புவர்களை போக விடுங்க. தண்டவாளத்தில் படுத்தவங்களை போய் தடுத்தீங்களா? வேணும்னே போறவனை, எனக்கு ஒண்ணும் ஆகாதுன்னு போறவன் இருந்தா என்ப? போனா என்ப?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X