சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சைக்கிளில் புறப்பட்ட தொழிலாளர்கள் சிக்கினர்

Added : மே 22, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : சைக்கிளில், சொந்த மாநிலத்திற்கு புறப்பட்ட, வட மாநில தொழிலாளர்களை, போலீசார் மடக்கினர்.

செங்கல்பட்டு அடுத்த, சாலவாக்கம் பகுதி, தனியார் டயர் தொழிற்சாலையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள், செங்கல்பட்டிலிருந்து, புதிய சைக்கிளில், சொந்த மாநிலத்திற்கு கிளம்பினர்.பாலுார் அடுத்த, பழையசீவரம் அருகில் சென்றபோது, ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை மடக்கி, காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின், வட மாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சிறப்பு முகாமில், அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

வடமாநில தொழிலாளர்களை, சில தினங்களில், சொந்த மாநிலத்திற்கு ரயில் மூலம் அனுப்பி வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக, பாலுார் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X