தமிழ்நாடு

கொரோனா பாதிப்பில் செங்கை தமிழகத்தில் இரண்டாம் இடம்

Added : மே 22, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : கொரோனா தொற்று பாதிப்பில், தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களில், மார்ர், 24ம் தேதியிலிருந்து, கொரோனா பரவ துவங்கியது.தொடர்ந்து, செங்கல்பட்டு, வண்டலுார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களுக்கும் தொற்று பரவி, அதிகரித்து வருகிறது.

மேற்கண்ட பகுதிகளில், தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில், கப சுர குடிநீர் வினியோகம், கிருமி நாசினி தெளிப்பு, துாய்மை பணி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 621பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டது. இதில், 298 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், பல்லாவரம் - 16; தாம்பரம் - -10; செங்கல்பட்டு - நான்கு; திருக்கழுக்குன்றம், திருப்போரூர் - தலா இரண்டு; வண்டலுார் - ஒன்று என, மொத்தம், 35 பேருக்கு, நேற்று, வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.இதுவரை, மொத்த பாதிப்பு, 656 ஆக உயர்ந்துள்ளதால், கொரோனா பாதிப்பில், தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு, நேற்று முன்தினம் வரை, 594 ஆக இருந்தது. நேற்று, கடம்பத்துார், திருவள்ளூர், வில்லிவாக்கம், பூந்தமல்லி, ஆவடி மாநகராட்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை, 636 ஆக உயர்ந்தது. இதில், 215 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். எட்டு பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது, 413 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட அளவில், நேற்று முன்தினம் வரை, 222 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.இந்நிலையில், நேற்ற புதிதாக, 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.ஸ்ரீபெரும்புதுார் - ஆறு; குன்றத்துார் - நான்கு; காஞ்சிபுரம் நகராட்சி - மூன்று என, 13 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் பாதிக்கப்பட்ட ஆறு பேர், ஒரே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர்கள். மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X