பொது செய்தி

தமிழ்நாடு

அரசு இலவச வீடு தாமதம் குடிசை புதுப்பித்த இருளர்

Added : மே 22, 2020
Share
Advertisement
 அரசு இலவச வீடு தாமதம் குடிசை புதுப்பித்த இருளர்

மாமல்லபுரம் : செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, வாயலுார், காரைத்திட்டு பகுதியில், இருளர்கள் வசித்து, சுற்றுப்புற பகுதிகளில், கூலி வேலை செய்கின்றனர்.

சுனாமி பாதிப்பைத் தொடர்ந்து, தண்டரை, இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பு, இங்கு கிளை துவக்கி, அதன் பெயரில், ௨ ஏக்கர் நிலம் வாங்கி, வீடுகள் கட்டி, இருளர்களிடம் ஒப்படைத்தது.இது ஒருபுறமிருக்க, குடும்பங்கள் பெருகிய நிலையில், வீடு இன்றி, குடிசையிலும் வசிக்கின்றனர். அமைப்பின் பெயரில் உள்ள நிலத்தை, பயனாளி பெயருக்கு மாற்றவும், குடிசையில் வசிப்போருக்கு, அரசு திட்ட வீடு கட்டவும், தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

வீடற்ற குடும்பங்களுக்கு, இலவச வீடு கட்டுவது குறித்து, ஆதிதிராவிட, பழங்குடி நலத் துறையினர், இங்கு ஆய்வு செய்து, பழங்குடி நலத்துறை இயக்குனருக்கு பரிந்துரைத்தும், நிதி ஒதுக்கீடு தாமதமாகிறது. பழுதடைந்த குடிசையிலும், வசிக்க இயலாத சூழலில், சொந்த செலவில், குடிசையை, புதிதாக அமைக்கின்றனர்.இதுபோல, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த, சங்கராபுரம் பகுதியிலும், இருளர் இலவச வீடு தாமதமாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X