கூட்டுறவு சங்க முதியோர் அவதி

Added : மே 22, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கத்தில், உறுப்பினர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, சங்கத்தின் சார்பில் மாதம், 1,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அந்த தொகை, இரு மாதங்களாக கிடைக்கவில்லை என, ஓய்வுதாரர் புகார் தெரிவிக்கின்றனர்.

ஓய்வூதியதாரர் ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரத்தில், பல கைத்தறி பட்டு கூட்டுறவுசங்கங்கள் உள்ளன. அதில் உறுப்பினர்களாகஇருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, அரசு விதிகளின்படி, ஓய்வூதியம் வழங்கப்பட்டது. தற்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால், நெசவாளர்களுக்கு வேலை இல்லை. அவர்களின் குடும்பம் மிகவும் சிரமப்பட்டு வருகிறது.இந்நிலையில், முதியோருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் இரு மாதங்களாக கிடைக்கவில்லை. தொடர்ந்து வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X