சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : மே 22, 2020
Share
Advertisement

4 ரவுடிகள் கைது

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி, தேசிய நெடுஞ்சாலையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில், நேற்று முன்தினம், போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர், போலீசாரை பார்த்ததும் வேகமாக சென்றனர். அவர்களை, துரத்திச் சென்று, மடக்கி பிடித்து போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்றனர்.விசாரணையில், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ரவுடிகளான சூரியா, 24, அருண், 21, கமலக்கண்ணன், 24 மற்றும் அரக்கோணத்தைச் சேர்ந்த பார்த்தீபன், 24 என்பதும், கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது.அவர்களிடமிருந்து, ஏழு நாட்டு வெடிகுண்டுகள், கத்தி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.

லாரி ஓட்டுனர் பலி

ஸ்ரீபெரும்புதுார்: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்தவர் மாணிக்கம், 45; லாரி ஓட்டுனர். நேற்று முன்தினம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருங்காட்டுக்கோட்டை, 'சிப்காட்' பூங்காவில் இருந்து, உதிரிபாகங்களை லாரியில் ஏற்றி, சுங்குவார்சத்திரம், 'சிப்காட்' சென்றார்.ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடியை கடந்தபோது, அங்கிருந்த தடுப்பின் மீது லாரி உரசாமல் இருக்க, லாரியை மெதுவாக ஓட்டியவாறு, ஓட்டுனர் இருக்கையின் சிறு கதவை திறந்து, மாணிக்கம் எட்டி பார்த்தார். அப்போது, லாரியில் இருந்து தவறிவிழுந்த அவர், பின் சக்கரத்தில் சிக்கி பலியானார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X