ஆதவபாக்கத்தில் குளம் சீரமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆதவபாக்கத்தில் குளம் சீரமைப்பு

Added : மே 22, 2020
Share

உத்திரமேரூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில், மே, 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஊரடங்கில் இருந்து தளர்வு ஏற்படுத்தி, ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, நிபந்தனையுடன் செயல்படுத்த, அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதையடுத்து, உத்திரமேரூர் ஒன்றியத்தில், 50 வயதுக்கு உட்பட்ட, 50 சதவீத பணியாளர்களை வைத்து, 100 நாள் திட்ட பணிகள், சில ஊராட்சிகளில் நடந்து வருகின்றன.அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியம், ஆதவபாக்கத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் சார்பில், 95 ஆயிரத்து, 500 ரூபாய் மதிப்பீட்டில், புதிய குளம் ஆழப்படுத்துதல் மற்றும் கரைகள் பலப்படுத்தும் பணி துவங்கிஉள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X