19வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை| Petrol, diesel price remain stagnant in Tamil Nadu | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

19வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020
Share
Fuel, petrol price, diesel price, chennai, TN fuel price, TN news, பெட்ரோல், டீசல், சென்னை, விலை, லிட்டர்

சென்னை: சென்னையில் இன்று (மே 22) பெட்ரோல் விலை, லிட்டருக்கு 75.54 ரூபாய், டீசல் விலை, லிட்டருக்கு 68.22 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருவாயை பெருக்குவதற்காக, பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி, தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது. இதன்படி, பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி, 28லிருந்து, 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி, 20லிருந்து, 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. அதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.26 ரூபாயும், டீசல் விலை, 2.51 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, மே 4 முதல் அமலுக்கு வந்தது.


latest tamil news


இந்நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, 19வது நாளாக ஒரே விலையில் தொடர்கிறது. இதன்படி, பெட்ரோல் 75.54 ரூபாயாகவும், டீசல் 68.22 ரூபாயாகவும் உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X