வெளிமாநில தொழிலாளர்களால் உ.பியில் அதிகரித்த கொரோனா| Large number of migrant workers test COVID-19 positive in UP | Dinamalar

வெளிமாநில தொழிலாளர்களால் உ.பியில் அதிகரித்த கொரோனா

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (2)
Share

லக்னோ : வெளிமாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில், 'கொரோனா' வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, திடீரென உயர்ந்துள்ளது. இதுவரை பரிசோதனை செய்ததில், வெளிமாநிலத் தொழிலாளர்களில், 22 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.



latest tamil news



நாடு முழுதும் வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். இதில் அதிகமானோர், உத்தர பிரதேசத்துக்கு திரும்பியவர்கள். இவ்வாறு வருவோர், தனிமை மையங்களில் தங்க வைக்கப்பட்டு, பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில், மாநிலத்தில், வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இது குறித்து, உத்தர பிரதேச சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்த, 4 - 5 நாட்களில், வைரஸ் பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினசரி பரிசோதனை அளவு உயர்ந்தது ஒரு காரணம். அதைத் தவிர, வெளிமாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளர்களுக்கு பாதிப்பு உள்ளதே முக்கிய காரணம்.

மாநிலத்தில், இதுவரை வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2.6 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில், வெளிமாநிலத் தொழிலாளர்களிடம் வைரஸ் பாதிப்பு, 22 சதவீதமாக உள்ளது. நேற்று முன்தினம் மட்டும், வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய, 117 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், 26 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது தெரிய வந்தது.


latest tamil news



நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 4.75 லட்சம் தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். இதுவரை, 187 வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர். இந்நிலையில், 'வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய முன்வருவோர் கைது செய்யப்படுகின்றனர். இருப்பினும், உத்தர பிரதேச காங்கிரஸ் தொண்டர்கள், தங்களுடைய முயற்சிகளை கைவிடக் கூடாது' என, காங்., பொதுச் செயலர், பிரியங்கா கூறியுள்ளார்.


latest tamil news



'வைரஸ் பாதிப்பு உள்ள ஆயிரக்கணக்கானோர் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'மாநில அரசுக்கு, இந்த வைரஸ், ஒரு மருத்துவப் பிரச்னையாக தெரியவில்லை; கிரிமினல் குற்ற மாகத்தான் தெரிகிறது' என, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான, அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X