பொது செய்தி

இந்தியா

6.8 கோடி சிலிண்டர்கள் இலவச வினியோகம்

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த ஏப்ரல் முதல், தற்போது வரை, ஏழைப் பெண்களுக்கு, 6.80 கோடி, 'காஸ் சிலிண்டர்'கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க, பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, கடந்த மார்ச்சில், பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள், எட்டு
gas, cylinder, Govt, free LPG cylinders, PMUY, Govt of india, Prime Minister's Poor Welfare Program, pm, காஸ், சிலிண்டர்

புதுடில்லி: கடந்த ஏப்ரல் முதல், தற்போது வரை, ஏழைப் பெண்களுக்கு, 6.80 கோடி, 'காஸ் சிலிண்டர்'கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க, பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, கடந்த மார்ச்சில், பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள், எட்டு கோடி பேருக்கு, மூன்று மாதங்களுக்கு, மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில், ஏப்ரல் முதல் தற்போது வரை, பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ், கிராமப்புற ஏழை பெண்களுக்கு, 6.80 கோடி காஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலவச காஸ் சிலிண்டர்களுக்கான தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் முன்னதாகவே வரவு வைக்கப்படுகிறது. இதனால், அத்தொகை மூலம், அவர்கள், அருகில் உள்ள எரிவாயு முகவர்களிடம், காஸ் சிலிண்டரை பெற்று வருவதாக, அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
22-மே-202015:20:46 IST Report Abuse
Ramachandran Rajagopal இதில் பல லட்சம் பெண்கள் ஏழைகள் அல்ல.பெண்கள் பெயரில் இலவச இணைப்பு கொடுத்துவிட்டு இந்த நாட்டில் அவர்கள் அனைவரும் ஏழைகள் என்றும் பெண்கள் பெயரில் வாங்கி கணக்கு துவக்கியவர் அனைவரும் ஏழைகள் என்றும் அவர்களுக்கு மட்டுமே நிவாரணம் அளித்துள்ளனர்.அவர்களில் பலர் வசதியானவர்கள் மற்றும் அரசை ஏமாற்ற அத்திட்டங்களில் சேர்ந்தவர்கள் ஆவர்.இதெல்லாம் அல்லது தெரியாதவர்களுக்கு ஏறாது.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
22-மே-202014:20:36 IST Report Abuse
Krishna Rulers MUST ABOLISH All WASTEFUL & EXTRAVAGANT EXPENDITURES Incl. FREEBY-BRIBERIES (Only 10% are Poordebilitated-aged etc Others are Earning & with Money), ALL GOVT. POSTS (with VVV FAT PAY-Scales Useless, Anti-People, Power Misusing Esp. Rulers-Officials Incl. Police-Judges), all Upperhouses Etc Etc Etc., With SAVED MONEY, ENSURE 01 JOB PER FAMILY With Only applicable Minm Wages For ALL in All Spheres (Incl. Power Misusing Dictator Rulers-Officials-Injustice Judges as They Encourage It Against Laws), FOOD-MEDICAL-ECONOMIC-SOCIAL (Basic Human Rights) SECURITY. Since People-Rep Rulers Will Not Do so, Every Year Elections Must so that Reps Will Fear & Work for Supreme People
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
22-மே-202013:25:26 IST Report Abuse
konanki ஐயோகோ என்ன கொடுமை. வட நாட்டு ஹிந்தி காரர் பானிபூரி பீடா வாயன் வந்தேறிகள் எங்க மரத்தமிழருக்கு விலையில்லாத காஸ் சிலிண்டர் கொடுப்பது கண்டு உளம் கொதிக்குதே . இந்த சதியை முறியடிக்க மெரினா சமாதியில் முத்தமிழ் வித்தவர் முன்னிலையில் இலவச காஸ் வாங்க மாட்டோம் எனப் போராட அலையென திரண்டு வா. வழியில் பிரியாணி கடையிலிருந்து பியூட்டி பார்லர் வரை வழக்கம் போல சூறையாடி ஒன்றிணைவோம் வா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X