சீனா எல்லை மீறி போகிறது: அமெரிக்கா குற்றச்சாட்டு
சீனா எல்லை மீறி போகிறது: அமெரிக்கா குற்றச்சாட்டு

சீனா எல்லை மீறி போகிறது: அமெரிக்கா குற்றச்சாட்டு

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
வாஷிங்டன் : 'கொரோனா' விவகாரத்தில் சீனா மீதுஅமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் 'பொருளாதார கொள்கைகள் ராணுவ நடவடிக்கைகள் பொய் பிரசாரம் மனித உரிமை மீறல் ஆகியவற்றிலும் சீனா எல்லை மீறிச் செயல்படுகிறது' என அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.'கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம்' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி

வாஷிங்டன் : 'கொரோனா' விவகாரத்தில் சீனா மீதுஅமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் 'பொருளாதார கொள்கைகள் ராணுவ நடவடிக்கைகள் பொய் பிரசாரம் மனித உரிமை மீறல் ஆகியவற்றிலும் சீனா எல்லை மீறிச் செயல்படுகிறது' என அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.latest tamil news


'கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம்' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.இந்நிலையில் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள20 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் அதிக வர்த்தகம் செய்ய சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல் சீனாவில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டன. அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சீன ராணுவத்துக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.இந்த நடவடிக்கைகள் மூலம் சீனா கம்யூனிச கொள்கைகளில் இருந்து விடுபடும்; அது தாராளமய கொள்கைக்கு மாறும் என அமெரிக்கா நினைத்தது. ஆனால் சீனாவின் நிலைப்பாடு தொடர்ந்து மோசமாகி வருகிறது. பொருளாதார கொள்கைகள் ராணுவ நடவடிக்கைகள் பொய் பிரசாரம் மனித உரிமை மீறல் என பல வகையிலும் அந்நாடு எல்லை மீறி செயல்படுகிறது. இதற்கு மேலும் சீனாவுடன் உறவு தொடர்வது அமெரிக்காவுக்கு நல்லதல்ல.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.latest tamil news


அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி உலகுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதை ஊடகங்கள் கவனிக்கத் தவறி விட்டன. சீனாவில் 1949ல் இருந்து மிக மோசமான சர்வாதிகார ஆட்சிநடந்து வருகிறது.தன் அரசியல் மற்றும் கொள்கை மூலம் சீனாவுக்கே சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆபத்தாக அமைந்து விட்டது. இதை உலக நாடுகள் தற்போது உணரத் துவங்கி விட்டன.இவ்வாறு அவர் கூறினார்.பொய்த் தகவல்அதிபர் டொனால்டு டிரம்ப் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்ப தாவது:சீனா தொடர்ந்து பொய்த் தகவல்களை பரப்பி வருகிறது. இந்தாண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனை வெற்றி பெற வைப்பதற்காக அவருக்கு ஆதரவாக சீனா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கருத்து ெவளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு வாய்ப்புஅமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்காசியாவுக்கான செயலர் அலைஸ் வெல்ஸ் கூறியதாவது:இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தம் செய்வதற்கு தயாராக உள்ளோம்.இந்த கொரோனா பாதிப்பு காலத்தில் இதற்கான வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இது அந்த நாட்டுக்கு மிகப் பெரிய பொன்னான வாய்ப்பு. பல்வேறு நாடுகள் சீனாவுடனான உறவை துண்டிக்கத் தயாராக உள்ளன.அதை இந்தியா சரியாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்தியாவுக்கு வாய்ப்பு

அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்காசியாவுக்கான செயலர் அலைஸ் வெல்ஸ் கூறியதாவது:இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தம் செய்வதற்கு தயாராக உள்ளோம்.இந்த கொரோனா பாதிப்பு காலத்தில் இதற்கான வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

Tamilnesan - Muscat,ஓமன்
28-மே-202017:10:30 IST Report Abuse
Tamilnesan அமெரிக்கா குற்றச்சாட்டை காலம் பூரா வைத்து கொண்டே இருக்கட்டும். கொரநா விஷயத்தில் சீனா மீது உடனே ராணுவ நடவடிக்கை அமெரிக்கா எடுக்க வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து அமெரிக்கா தலைமையில் சீனா மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால், சீனா நிச்சயம் சரண் அடையும். அப்போது, தற்போதுள்ள அதிபர் ஜீ ஜின்பிங்கை அதிபர் பதவியிலிருந்து தூக்கி கடாசிவிட்டு, தேர்தல் மூலம் ஜனநாயக ரீதியில் அடுத்த அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவதை அமெரிக்கா உறுதி செய்தி பின்னரே, அமெரிக்க படைகள் சீனாவை விட்டு வெளியேற வேண்டும். மேற்கண்ட செயல்களை செய்ய அமெரிக்காவால் தான் முடியும். அணைத்து நாடுகளின் துணையோடு அமெரிக்கா சீனாவை வெல்லட்டும். இறைவன் அருள்புரிவானாக
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
22-மே-202013:43:48 IST Report Abuse
Rameeparithi கோரனாவே சீனாவை கொல்லட்டும்...
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
22-மே-202010:37:34 IST Report Abuse
GMM ஜனநாயக அமெரிக்காவில் சர்வாதிகார, கம்யூனிச சீனா அதிக வர்த்தகம் செய்ய அனுமதி கொடுத்தது தொழில்/வர்த்தக தர்மத்திற்கு விரோதமானது. இன்று செல்வ வளம் சீனாவிடம். அமெரிக்கா போன்ற நாடுகள் நேர்மையான மக்களுக்கு மட்டும் தொழில் நுட்பம் கற்று கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X