பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பயணிகள் ரயில் சேவை எப்போது?

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Indian Railways, railway, tickets, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, TN, Tamilnadu, தமிழகம்,தமிழ்நாடு, ரயில்வே, டிக்கெட், முன்பதிவு

சென்னை: தமிழக முதல்வர், பழனிசாமி மாநிலத்திற்கு, வரும், 31 வரை, ரயில்கள் விட வேண்டாம் என கேட்டுள்ளதால், இங்கே, அது வரையிலும் ரயில் சேவை இருக்காது என, தெரிகிறது.


இன்று துவக்கம்:


ஊரடங்கால், மார்ச், 25 முதல் நிறுத்தப்பட்டிருந்த, பயணியர் ரயில் சேவை, ஜூன் 1 முதல் குறிப்பிட்ட மார்க்கங்களில் மீண்டும் துவங்க உள்ளன. முதற்கட்டமாக, 'துரந்தோ, சம்பர்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூர்வா' விரைவு ரயில் உள்ளிட்ட, 100 ஜோடி ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. வலைதளத்தில், ரயில் பயணத்திற்கான முன்பதிவு, நேற்று துவங்கியது.

இந்நிலையில், நாடு முழுதும் உள்ள 1.70 லட்சம் பொது சேவை மையங்களில், ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்குகிறது. கணினி, இணைய வசதிகளற்ற பகுதிகளில் உள்ளோரும் பயன் பெறும் வகையில் இது துவங்கப்படுவதாக ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


latest tamil newsதமிழகத்தில் மே 31ம் தேதி வரை ரயில் சேவை இருக்காது என தெரிகிறது. கலந்துரையாடலின் போது, பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் பழனிசாமி வரும் 31ம் தேதி வரை, தமிழகத்திற்கு ரயில்கள் விட வேண்டாம் என கேட்டுள்ளதால், ரயில் சேவை தமிழகத்தில் துவங்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
22-மே-202017:38:36 IST Report Abuse
S. Narayanan ட்ரெயின் சேவை உடனே தொடங்க பட வேண்டும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-மே-202013:02:38 IST Report Abuse
Bhaskaran முதலில் தனியார் பேருந்து இயக்க அனுமதிப்பாங்க போலிருக்கு
Rate this:
Cancel
சீனு கூடுவாஞ்சேரி முன்பெல்லாம் ரயில் கடைசியாக அடையும் ஊரின் பெயரிலேயே அதற்கு பெயர் வைத்தனர். மதுரை எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் என்றெல்லாம் இருந்தது. இந்த கழகங்கள் வந்தவுடன் அந்த முறையை மாற்றி கம்பன், முத்துநகர், கூடல், பல்லவன், சோழன் என்று பெயரை மாற்றியதால் ரயில்வே அதிகாரிகள் தவிர வேறு யாருக்கும் சரியாக புரியாதபடி மாற்றம் செய்ததால் குழப்பம் தான் மிச்சம்.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
22-மே-202013:33:30 IST Report Abuse
தமிழ்வேள்வடஇந்தியா முழுவதும் சிறப்பு பெயர் வண்டிகள் அதிகம் ..மகத் எக்ஸ்பிரஸ் அவத் அஸ்ஸாம் ,காகதீய கலிங்கா உத்கல் எக்ஸ் .மால்வா மஹா கோஷல் காம்ரூப் இப்படி ...சிறப்பு பெயர் உள்ள வண்டிகள் தமிழகத்தில் இருப்பதும் அவசியமே ..மதுரை செல்லும் வண்டி ஒன்றுக்கு 'தமிழ் சங்கம் எக்ஸ் ..என்று பெயர் சூட்ட இயலாது என்று சொன்னது ரயில்வே ..சோழன் எக்ஸ் / சேரன் எக்ஸ் பெயர் சுத்தமாக மறைக்கப்பட்டு விட்டது ..என்ன பயமோ தெரியவில்லை ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X