சென்னை: தமிழக முதல்வர், பழனிசாமி மாநிலத்திற்கு, வரும், 31 வரை, ரயில்கள் விட வேண்டாம் என கேட்டுள்ளதால், இங்கே, அது வரையிலும் ரயில் சேவை இருக்காது என, தெரிகிறது.
இன்று துவக்கம்:
ஊரடங்கால், மார்ச், 25 முதல் நிறுத்தப்பட்டிருந்த, பயணியர் ரயில் சேவை, ஜூன் 1 முதல் குறிப்பிட்ட மார்க்கங்களில் மீண்டும் துவங்க உள்ளன. முதற்கட்டமாக, 'துரந்தோ, சம்பர்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூர்வா' விரைவு ரயில் உள்ளிட்ட, 100 ஜோடி ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. வலைதளத்தில், ரயில் பயணத்திற்கான முன்பதிவு, நேற்று துவங்கியது.
இந்நிலையில், நாடு முழுதும் உள்ள 1.70 லட்சம் பொது சேவை மையங்களில், ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்குகிறது. கணினி, இணைய வசதிகளற்ற பகுதிகளில் உள்ளோரும் பயன் பெறும் வகையில் இது துவங்கப்படுவதாக ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ரயில் சேவை இருக்காது என தெரிகிறது. கலந்துரையாடலின் போது, பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் பழனிசாமி வரும் 31ம் தேதி வரை, தமிழகத்திற்கு ரயில்கள் விட வேண்டாம் என கேட்டுள்ளதால், ரயில் சேவை தமிழகத்தில் துவங்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.