பொது செய்தி

இந்தியா

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் நிர்மலா இன்று ஆலோசனை

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(மே 22) ஆலோசனை நடத்த உள்ளார். இதில், வங்கிகள் வழங்கி வரும் கடன்கள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார திட்டங்கள்
Nirmala, Nirmala Sitharaman, PSU Bank Chiefs, Finance Minister, loans, banks, நிர்மலா,நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(மே 22) ஆலோசனை நடத்த உள்ளார். இதில், வங்கிகள் வழங்கி வரும் கடன்கள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த வாரம் தொடர்ந்து 5 நாட்களாக கடனுதவி, நிதியுதவி மற்றும் சீர்திருத்த திட்டங்களை அறிவித்தார்.


latest tamil news



இந்நிலையில், பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிர்மலா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, அறிவிக்கப்பட்ட திட்டங்களை சிக்கலின்றி நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், நிர்மலா அறிவித்த திட்டங்களில் பெரும்பாலும், வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்.

வங்கி கடன்களுக்கான இ.எம்.ஐ., 3 மாதங்கள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், அதனை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
22-மே-202016:57:02 IST Report Abuse
chakra தினமலர் பிஜேபி பத்திரிகையா ?
Rate this:
jaisriram - coimbatore,இந்தியா
22-மே-202018:18:15 IST Report Abuse
jaisriramDon't you know this already?...
Rate this:
Cancel
Sapere Aude -  ( Posted via: Dinamalar Android App )
22-மே-202009:43:32 IST Report Abuse
Sapere Aude நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு மாபெரும் திட்டங்களை அறிவித்துள்ளது. இதை மாநில அரசுகளுடன் இயக்கவேண்டும். இதில் அரசு வங்கிகளின் ஈடுபாடு அதிகம் உள்ளது. ஆகவே இதை சுலபமாக இயக்க வங்கிகளுடன் இணைந்து வழிமுறைகளை நிர்ணயிப்பது மிகவும் அவசியம். நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இந்த கூட்டத்தை அழைத்திருப்பது பாராட்டுக்குறியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X