பொது செய்தி

இந்தியா

உணவு விநியோக துறையிலும் இறங்கியது அமேசான்

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

பெங்களூரு: ஜொமாடோ,ஸ்விக்கிக்கு போட்டியாக உணவு விநியோக துறையிலும் அமேசான் இறங்கி உள்ளது.



latest tamil news



இது குறித்து அமேசான் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்: எல்லா அத்தியாவசிய பொருட்களுக்கும் ஷாப்பிங் செய்வதோடு கூடுதலாக அமேசானில் தயாரிக்கப்பட்ட உணவை ஆர்டர் செய்ய விரும்புவதாக வாடிக்கையாளர்கள் சில காலமாக எங்களிடம் கூறி வருகின்றனர் என்றார்.

வணிக ஆலோசனை நிறுவனமான மார்க்கெட் ரிசர்ச் பியூச்சர் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஆன்லைன் உணவு வர்த்தகம் 16 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்து 2023-ம் ஆண்டில் 17.02 பில்லியன் டாலர்களை எட்டும் என கூறி உள்ளது.


latest tamil news



அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உணவுதொழில் 4 பில்லியன் டாலரில் இருந்து 15 பில்லியன் டாலராக அதிகரிக்கவாய்ப்பு உள்ளதாக மற்றொரு ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் ஸ்விக்கி நிறுவம் ஆயிரத்து 100 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதே போல் ஜொமாடோ நிறுவனமும் 600 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் உணவு விநியோக துறையில் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
22-மே-202015:54:29 IST Report Abuse
Raj ஹம் தேசிய பேரிடர் காலங்களில் இவர்கள் தான் மக்கள் பணி செய்தார்கள். இவர்களை ஆதரியுங்கள்.
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
22-மே-202011:48:16 IST Report Abuse
K.Sugavanam இந்தியர்களுக்கு கொண்டாட்டம் தான்..நம்மை அந்நியர்கள் மொட்டை அடிப்பதில்.
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
22-மே-202019:19:56 IST Report Abuse
uthappaபொருட்கள் உள்ளூர் வணிகர்களிடம் இருந்து, சுமந்து வருவோர் உள்ளூர் பணியாளர்கள், பயன் பெறுவோர் உள்ளூர் மக்கள், பணியில் இருப்போர் பெரும்பாலோர் உள்ளூர் மக்கள் .அந்நியனாக இருக்கட்டும், உள்ளோர் மக்களுக்கு வேலை வாய்ப்பும், உள்ளூர் வணிகர்களுக்கு பலன் கொடுப்பதும் இன்றைய சூழ்நிலையில் நல்லதே.முடிந்தால் நீங்கள் உங்களுக்கு பிடித்த கட்சி தலைவரை இதே பணியை செய்ய சொல்லுங்கள்....
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
22-மே-202011:46:34 IST Report Abuse
K.Sugavanam வரவேற்க வேண்டியதுதான்..எல்லாவற்றையும் திறந்துவிட்ட பின்னால் அமேசான் எதை விநியோகித்தல் என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X