நடவடிக்கை எடுக்க உத்தவுக்கு பயம்: பட்னவிஸ்

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை: முதல்வர் உத்தவ் தாக்கரே புதியவர் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் பயப்படுகிறார் என மஹா., முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 1,454 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24
Uddhav Thackeray, Fadnavis, Devendra Fadnavis, Maharashtra, CoronaVirus crisis, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா, முதல்வர், நடவடிக்கை, பயப்படுகிறார், தேவேந்திர பட்னவிஸ், கொரோனா, வைரஸ்,

மும்பை: முதல்வர் உத்தவ் தாக்கரே புதியவர் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் பயப்படுகிறார் என மஹா., முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 1,454 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அம்மாநிலத்தில் 2,345 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு, 64 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே செல்லும் பாதிப்பை கட்டுப்படுத்த தவறுவதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மீது எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.


latest tamil newsஇந்நிலையில் இது குறித்து முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது: மஹா.,வில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் எதுவும் இல்லை. தனியார் மருத்துவமனைகள் ஒரு படுக்கைக்கு கொரோனா நோயாளிகளிடம் இருந்து ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் வசூலிக்கின்றன. அதுவும் அத்தகைய படுக்கைகள் பணக்காரர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் 80 சதவீத படுக்கைகள் அரசுக்கு சொந்தமானவை என அறிவித்தாலும், இத்தகைய அவலங்கள் அனைத்தும் நடக்கின்றன.

கொரோனாவை கையாள்வதில் மஹா., அரசின் மிகப்பெரிய பிரச்னை உள்ளது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிகிறது. முதல்வர் உத்தவ் தாக்கரே புதியவர் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் பயப்படுகிறார். புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற, அரசு விரும்பியதாக தெரிகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள், மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்துள்ளனர். அவர்கள் எப்போது மீண்டும் வருவார்கள் என நம் மனதில் அச்சம் இருக்கிறது. ஆனால், அவர்கள் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
22-மே-202017:27:32 IST Report Abuse
Chandramoulli Anupavam illai. Avathi paduvathu makkale. Ippothu Ulla nilamai needitthal August varai kasta kaalam mumbaikku. Varum naatkal mika kadumaiyaaka irukkum. Nilamai kaimeeri vittathu
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
22-மே-202015:17:14 IST Report Abuse
Cheran Perumal எல்லாவற்றையும் விட இவரது ஒவ்வொரு அசைவிற்கும் காங்கிரசும், தே வா காங்கிரசும் என்ன சொல்வார்களோ என்ற பயம். அவர்களது அங்கீகாரம் இல்லாமல் இவரால் எந்த செயலையும் செய்ய முடியாது. மன்மோகன் போல இவர் பொம்மை முதல்வர்.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
22-மே-202014:04:21 IST Report Abuse
Sridhar கூடாநட்பு பெரும் கேடில் முடியும். ஒருபுறம் அனுபவம் இல்லாத முதலமைச்சர். மறுபுறம் கருணாநிதியே வெட்கப்படும் அளவுக்கு மிகபயங்கரமான ஊழல் செய்யும் பவார் காங்கி கும்பல்கள். மகாராஷ்டிரா கதை முடிந்தது. இதில் பரிதாபம் என்னவென்றால், இப்போது ஆள்பவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. ஆகவே, அவர்கள் தவறு பெரிதாக இல்லை. என்ன, வோட்டுப்போடும்போது இன்னும் கொஞ்சம் அழுத்தமாக BJP கு போட்டிருந்தால், இந்த பிரச்சனைகளை சந்தித்திருக்கமாட்டார்கள். ஹ்ம்ம் ... அவர்களுக்கு வந்த கஷ்டகாலம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X