பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா உபதேசம் ஊருக்கு மட்டுமே..! சமூக இடைவெளியை மறந்த அதிகாரிகள்

Added : மே 22, 2020
Share
Advertisement

அந்தியூர்: அந்தியூர், அத்தாணி, குப்பாண்டாபளையம், கெட்டிசமூத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிறுவனங்களில், ஒடிசா உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வேலை பார்த்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால், சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதாக, வருவாய் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, 106 பேரை, ஒடிசா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதையடுத்து, தவிட்டுப்பாளையத்தில் தனியார் மண்டபத்தில், அவர்களை நேற்று தங்க வைத்தனர். அந்தியூர் தாசில்தார் தலைமையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. ஆனால், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கமால், அருகருகே அமர வைக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே, இடைவெளிவிட்டு அமரவைத்து, மதிய உணவு கொடுத்தனர். இதையடுத்து அனைவரும், தனியார் பள்ளி வாகனங்களில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள், ரயிலில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.* பவானி தாலுகா பகுதியில், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த, ஒடிசா மாநில தொழிலாளர், 81 பேர், நேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக பவானியில் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு சென்ற எஸ்.பி.,சக்தி கணேசன், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, சமூக இடைவெளி கடைப்பிடித்தல், மாஸ்க் அணிவது உள்ளிட்டவை அவசியம் என்று அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X