பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., வீட்டை நினைவில்லமாக்க அவசர சட்டம்

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
AIADMK, Jayalalithaa, Poes Garden, Tamil Nadu, TN news, AIADMK leader, acquisition, TN government, Chennai, அ.தி.மு.க,ஜெயலலிதா, வேதாநிலையம், போயஸ்கார்டன், ஜெ., வீடு, நினைவில்லம், தமிழக அரசு,அவசர சட்டம்

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த 'வேதா இல்லம்' வீட்டை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் வாழ்ந்த, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள, 'வேதா இல்லம்' வீட்டை, அவரது நினைவு இல்லமாக மாற்ற, தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக நிதி ஒதுக்கவும் செய்தது. நினைவில்லம் ஆக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலம் மற்றும் வீட்டை கையகபடுத்துவதற்கான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு வெளியிட்டது.


latest tamil news



இந்நிலையில், 'வேதா இல்லம்' வீட்டை நினைவில்லமாக மாற்ற அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் வேதா நிலையம் மற்றும் அதில் உள்ள அசையும் பொருட்கள் அரசுடமையாகிறது. இந்த சட்டத்தின்படி, வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற 'புரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை' அமைக்கப்படுகிறது. இதன் தலைவராக முதல்வரும், உறுப்பினர்களாக துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செயல்படுவார்கள். இந்த அறக்கட்டளை, வேதா நிலையத்தை நிர்வகிப்பதுடன், அதனை பராமரிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கையை எடுக்கும் என தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
22-மே-202017:10:30 IST Report Abuse
RajanRajan அடுத்த குரானா தாக்குதல் ஆட்டைய துவங்கிட்டானுங்க மக்களுக்கு சல்லிக்காசுக்கு பிரயோஜனம் இல்லாத வெட்டி வேலை நாயகர்கள். மக்களை பொறுத்தவரை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு மணிமண்டபமா எனும் கேள்விதான் மிச்சம்.
Rate this:
Cancel
22-மே-202015:46:46 IST Report Abuse
சூரியா அஇஅதிமுகவினருக்கு வேண்டுமானால் ஜெயலலிதா போற்றப்பட வேண்டியவராக இருக்கலாம். சாதாரண தமிழக மக்களுக்கு அவர் கோர்ட்டால் தண்டிக்கப்பட்ட ஒரு ஊழல் குற்றவாளி, அவர் வசித்த இல்லம், ஊழல்கள் நடந்த இடம். இந்த இடத்தை மக்கள் பணத்தில் வாங்கி, அதை ஒரு நினைவிடமாக்குவது, நடு நிலையாளர்கள் மீது திணிக்கப்படும் ஒரு செயல். வேண்டும் என்றால் அவர்களது கட்சிப் பணத்தில் அந்த வீட்டை வாங்கி, அதிமுவினர் அதனை அவர்களது தலைவியின் நினைவிடமாக வைத்துக்கொள்ளலாம்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
22-மே-202015:22:30 IST Report Abuse
வெகுளி கோபாலபுரம் வீட்டையும் நினைவிடமாக்கணும்.... நல்ல நினைவுகள் போல கெட்ட நினைவுகளும் வாழ்வில் தவிர்க்க முடியாதவையே.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X