பொது செய்தி

தமிழ்நாடு

மலைப்பகுதி மாணவர்களுக்கான விடுதி விரைவில் திறப்பு; சி.இ.ஓ., தகவல்

Added : மே 22, 2020
Share
Advertisement

ஈரோடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையொட்டி, மலை கிராம மாணவர்கள் பயன்பெற, அரசு விடுதிகள் விரைவில் திறக்கப்படும் என, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஒரு லட்சத்து, 70 ஆயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அவர்களுக்கு நடப்பாண்டுக்கான முதல் பருவ பாடப்புத்தகம், வரத் தொடங்கியுள்ளது. தற்போது வரும் ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு பாடப்புத்தகங்கள், ஈரோடு, கருங்கல்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு வருகிறது. பள்ளி திறப்பதற்கு முன், அனைத்து புத்தகங்களும் வந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம். மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, பிற மாவட்டத்தில் எழுதும், மாணவ, மாணவியர் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தாளவாடியை அடுத்த கொங்காடை மலைப்பகுதி மாணவ, மாணவியர் பலர், விடுதிகளில் தங்கி படித்து வந்தனர். அவர்களுக்காக இன்னும் ஓரிரு நாளில், அரசு விடுதிகள் திறக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுதிகள் திறக்கப்பட்ட பின், உரிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டு, மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X