பொது செய்தி

தமிழ்நாடு

நூற்பாலைகளை இயக்குவதில் சிக்கல்: உரிமையாளர் கவலை

Added : மே 22, 2020
Share
Advertisement

புன்செய்புளியம்பட்டி: ஊரடங்கு முடியும் நிலையில், வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதால், நூற்பாலைகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான, நல்லூர், புங்கம்பள்ளி, மாதம்பாளையம், பனையம்பள்ளி, நீலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 45க்கும் மேற்பட்ட, ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. இவற்றில் மதுரை, திருநெல்வேலி மற்றும் வட மாநில தொழிலாளர்கள்தான் அதிகம் பணிபுரிகின்றனர். நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வால், வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதால், நூற்பாலைகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, வருத்தம் எழுந்துள்ளது.

இதுகுறித்து நூற்பாலை உரிமையாளர்கள் கூறியதாவது: ஊரடங்கால் இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பில், உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கை தளர்த்தும் வகையில் வெளியிடும் அறிவிப்புகளால் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. ஜவுளி தொழிலை பொறுத்தவரை, 80 சதவீதம் வட மாநில தொழிலாளர்களை நம்பியுள்ளது. கடந்த, 50 நாட்களாக, தொழிலாளர்களை தங்க வைத்து, உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து தந்தோம். ஊரடங்கு முடியும் தருவாயில், தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதால், நூற்பாலைகளை இயக்குவது கேள்விக்குறியாகி விட்டது. ஸ்பின்னிங் மில்கள் முழுமையாக செயல்பட, மாவட்ட, மாநில போக்குவரத்துக்கும் ஊரடங்கில் இருந்து தளர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X