பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் இருந்து 2வது நாளாக ரயில் இயக்கம்: ஒடிசா தொழிலாளர் 1,464 பேர் புறப்பட்டனர்

Added : மே 22, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில் இருந்து, இரண்டாவது நாளாக இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, 1,464 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு, நான்காம் கட்ட ஊரடங்கால், ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பிற மாநிலத்தவர், தங்கள் ஊர் செல்ல தீவிரம் காட்டினர். இதையடுத்து அவர்களுக்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில், நேற்று முன்தினம் முதலாவது சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும், உ.பி., மாநிலத்தை சேர்ந்த, 1,464 பேர் ஷ்ரமிக் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிலர் பஸ், வேன் மூலம் சொந்த மாநிலத்துக்கு சென்றனர். இந்நிலையில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, ஒடிசா மாநிலத்துக்கு, நேற்று ஷ்ரமிக் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதில் ஆண், பெண், குழந்தைகள் என, 1,464 பேர், 24 ரயில் பெட்டிகளில், கலெக்டர் கதிரவன், எஸ்.பி., சக்தி கணேசன் முன்னிலையில் நேற்று மாலை, 5:30 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்ட அனைவருக்கும், அந்தந்த பகுதிகளில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஈரோட்டில் இருந்து, ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு, ஷ்ரமிக் சிறப்பு ரயில் இன்று மாலை இயக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X