பொது செய்தி

தமிழ்நாடு

ஆய்வில் சேலம் அரசு கல்லூரிக்கு 3ம் இடம்

Added : மே 22, 2020
Share
Advertisement

சேலம்: தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில், சேலம் அரசு கலைக்கல்லூரி, தமிழகத்தில் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது. நாட்டிலுள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில், முதல், 500 'ரேங்கிங்' அடங்கிய கல்லூரிகளை, 'கல்வி உலகம்' எனும் அமைப்பு வரிசைப்படுத்தியுள்ளது. அதில், தனியார் சுயாட்சி, அரசு சுயாட்சி, சுயாட்சியல்லாத கல்லூரிகள் என வரிசைப்படுத்தியுள்ளன. அதன்படி, அரசு சுயாட்சி கலைக்கல்லூரிகளில், சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி, அகில இந்திய அளவில், 38ம் இடம், தமிழக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஆசிரியர் திறன், பாடத்திட்டம், கற்பித்தல், உட்கட்டமைப்பு வசதி, தலைமை, நிர்வாக திறன் உள்ளிட்ட தலைப்புகளில் நடந்த ஆய்வில், 700 மதிப்பெண்ணுக்கு, 425 மதிப்பெண் பெற்றதாக, சர்வே தெரிவித்துள்ளது. இதனால், அக்கல்லூரி முதல்வர் கலைச்செல்வன், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X