பொது செய்தி

தமிழ்நாடு

முகக் கவசமின்றி பணிபுரியும் கட்டுமான தொழிலாளர்கள்: தாலுகா அலுவலகத்திலேயே கவனிக்காத அலட்சியம்

Added : மே 22, 2020
Share
Advertisement

ஆத்தூர்: தாலுகா அலுவலகத்தில், முகக் கவசம் அணியாமல், கட்டுமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுவதை, வருவாய்த்துறையினர் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில், இருசக்கர வாகனங்கள் நிறுத்த, மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அப்பணியில் ஈடுபடும் கட்டட தொழிலாளர், முகக் கவசம் அணியாமல் பணிபுரிகின்றனர். தாலுகா அலுவலக வளாகத்திலேயே, இப்படி பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்து, தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து, வருவாய்த்துறையினர் கூறுகையில், 'கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், முகக் கவசம் அணிந்து பணிபுரிய அறிவுறுத்தப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X