பொது செய்தி

தமிழ்நாடு

இசைக்கருவி வாங்க நிதியுதவி: கலைஞர்களுக்கு அழைப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாவட்ட கலைஞர்கள், கலைக்குழுக்களுக்கு, இசைக் கருவிகள், ஆடை, அணிகலன் வாங்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக கிராமிய கலைகளை போற்றி வளர்க்க, கலைஞர்களையும், கலைக்குழுக்களையும் ஊக்குவிக்க, இசைக்கருவி, ஆடை, அணிகலன் வாங்கி, தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும், 5,000 ரூபாய் வீதம், 500 பேருக்கும், கலைக்குழுவுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் வீதம், 100 குழுவுக்கும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. தனிப்பட்ட கலைஞர், 2020, மார்ச், 31ல், 16 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கலைக்குழுக்கள், தங்கள் நிறுவனத்தை பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்ப படிவம் இலவசமாக வழங்கப்படுகிறது. நகல் எடுத்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 'உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமிராஜா சாலை, சென்னை - 28' எனும் முகவரிக்கு, ஜூன், 30க்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை நேரிலும் வழங்கலாம். சேலம் மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X