தமிழ்நாடு

நீதிமன்றம் முயன்றதற்கு 'கொரோனா' முடிவு கட்டியது: 'ஆர்டர்லி' வேலையையும் கவனிக்கும் போலீஸ் அதிகாரிகள்

Added : மே 22, 2020
Share
Advertisement

சேலம்: போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில், எடுபிடி வேலையில் ஈடுபட்டு வந்த, 'ஆர்டர்லி' முறையை ஒழிக்க நீதிமன்றம் முயன்றது. ஆனால், அதற்கு, 'கொரோனா' முடிவு கட்டியதால், அதிகாரிகள், தங்களின் வேலையை, தாங்களே செய்ய தொடங்கியுள்ளனர்.
போலீசின், உதவி கமிஷனர் அல்லது டி.எஸ்.பி., பணி முதல், டி.ஜி.பி., வரையிலான பணி வகிப்பவர் வீடுகள், முகாம் அலுவலகங்களில், சமையல், துணி துவைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது, தோட்ட பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட 'எடுபிடி' வேலைகளில், ஒருவருக்கு தலா, 10 பேர் வீதம், 3,000க்கும் மேற்பட்ட, 'ஆர்டர்லி'கள் உள்ளனர். பணியில் உள்ளவருக்கு மட்டுமின்றி, ஓய்வு பெற்ற முன்னாள் எஸ்.பி., முதல், டி.ஜி.பி., வரை, 'ஆர்டர்லி'கள் எடுபிடி வேலையை மேற்கொண்டு வந்தனர். இம்முறையை ஒழிக்க, 2019ல், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும் பல்வேறு முயற்சி மேற்கொண்டபோதும், ஆர்டர்லி முறைக்கு முடிவு கட்ட முடியவில்லை. தற்போது, 'கொரோனா'வின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில், சென்னை, அண்ணா நகரில் பணிபுரிந்த, துணை கமிஷனர், கூடுதல் துணை கமிஷனர் ஒருவருக்கும், தொற்று இருப்பது உறுதியாகி, சிகிச்சை பெற்று குணமாகினர். அவர்களுக்கு, சமையல் பணியில் ஈடுபட்ட, ஆர்டர்லியிடமிருந்து தொற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அதிகாரிகளின் குடியிருப்பு, முகாம் அலுவலகங்களில், எடுபிடி வேலைகளில் ஈடுபட்டு வந்த ஆர்டர்லிகள் வெளியேற்றப்பட்டு, அவர்களுக்கு ஸ்டேஷன் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் மட்டும், 1,500 பேர், பிற மாவட்டங்கள், மாநகரில், 1,750 பேர், ஸ்டேஷன், சிறப்பு பிரிவு பணிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதிகாரிகள் தங்கள் வீட்டு பணிகளை தாங்களே கவனிக்க துவங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X